ட்ரம்ப் வரி விதிப்பிலிருந்து பிரித்தானியா தப்பலாம்: பிரதமரின் முயற்சி வெற்றி
பிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்த நிலையில், வரி விதிப்பிலிருந்து பிரித்தானியாவை தப்புவிக்க அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது எனலாம்.
பிரித்தானிய பிரதமரின் முயற்சி வெற்றி
உலக நாடுகளின் தலைவர்கள் சிலர், ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து தப்புவதற்காக அவரை நேரில் சென்று சந்தித்துவருகிறார்கள்.
அவ்வகையில், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை நேரில் சந்தித்துள்ளார் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர்.
இந்நிலையில், பிரித்தானியா மீது வரி விதிக்கவேண்டாம் என ஸ்டார்மர் வற்புறுத்த முயன்றாரா என ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ஆம், அவர் கடினமான முயற்சி செய்தார், அதற்கான பலனையும் பெற்றுக்கொண்டார் என்றார்.
அத்துடன், இந்த இரண்டு சிறந்த நண்பர்களும், அதாவது, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு சிறந்த வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என நினைக்கிறேன்.
அப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் பட்சத்தில், வரி விதிப்புகளுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும் என நான் நினைக்கிறேன், பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
ஆக, கனடா, மெக்சிகோ மீது மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் மீதும் வரிகள் விதிக்க இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், பிரித்தானிய பிரதமரின் முயற்சியால், ட்ரம்பின் வரி விதிப்புகளிலிருந்து பிரித்தானியா தப்பலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |