பிரான்சில் இந்த பகுதியில் கட்டுப்பாட்டை மீறி பிரித்தானியா வைரஸ் வேகமாக பரவி வருகிறது! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் இருக்கும் இல் து பிரான்சுக்குள் பிரித்தானியா கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவி வருவதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் என்பதால், அது தற்போது வரை குறிப்பிட்ட சில நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், பிரான்சும் ஒன்று. பிரான்சில் பிரித்தானியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இல் து பிரான்சுக்குள் பிரித்தானிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவி வருகிறது.
இல் து பிரான்சுக்கான பிராந்திய சுகாதார நிறுவனம், 37.7 சதவீதம் பிரித்தானிய பிரிவு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
les laboratoires Biogroup எனும் ஆய்வகத்தினரால் 7.000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியானது. அதிலே இந்த தொற்று வீதம் தெரியவந்துள்ளது.
கடந்தவாரத்தில் இல் து பிரான்சுக்குள் பிரித்தானிய தொற்று வீதம் 24 சதவீதம் ஆக இருந்த நிலையில், இவ்வாரத்தில் அது 37.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக Yvelines மாவட்டத்தில் 52 சதவீதமும், Val-de-Marne மாவட்டத்தில் 47 சதவீதமும், Hauts-de-Seine மாவட்டத்தில் 43 சதவீதமும் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேவேளை பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க பிரிவு கொரோனா வைரஸ் 2.7 சதவீதம் மட்டுமே இல் து பிரான்சுக்குள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.