பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை
UK visa relief for modern slavery victims: பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகை
பிரித்தானியாவில் பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள் மற்றும் பலர் நவீன அடிமைத்தன (Modern Slavery) சூழ்நிலையிலிருந்து தப்பிய நிலையில், தங்களின் குடியேற்ற நிலையை (migration status) இழக்காமல் பாதுகாப்பாக வேலையை தொடர Home Office புதிய சலுகையை அறிவித்துள்ளது.

முன்பு, Brexit-க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட Skilled Worker Visa திட்டத்தின் கீழ், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களை ஸ்பான்சர் செய்த நிறுவனத்துடன் மட்டுமே வேலை செய்ய முடிந்தது.
அந்த நிறுவனத்திலிருந்து விலகினால், புதிய ஸ்பான்சரை விரைவாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், பலர் தங்கள் migration status-ஐ இழக்கும் அச்சத்தில், குறைந்த சம்பளம், நீண்ட நேர வேலை, Zero-hour contract போன்ற சுரண்டல்களை சகித்துக் கொண்டனர்.
இப்போது, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய மாற்றத்தின் படி, ஒருவர் “Modern Slavery victim” என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால், அவர்களுக்கு மீதமுள்ள விசா காலத்தில் எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.
இது, சுரண்டலிலிருந்து தப்பியவர்களுக்கு பாதுகாப்பாக வாழவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவும்.
Salvation Army-யின் Anti-Trafficking பிரிவு துணை இயக்குநர் Heather Grinsted கூறியதாவது: “இந்த மாற்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மரியாதையுடன் மீண்டும் தொடங்க உதவும்.”
ஆனால் Work Rights Centre நிறுவனத்தின் தலைவர் Dora-Olivia Vicol, “இது பெரிய மாற்றமாக இருக்கலாம். ஆனால் Modern Slavery framework எவ்வளவு எளிதில் அணுகக்கூடியது என்பதில்தான் அதன் பயன் இருக்கும்” என எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய அரசு, சுரண்டல் செய்த நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உரிமை இழந்துள்ளன.
Migration and Citizenship அமைச்சர் Jo White கூறியதாவது: “அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் குடியேற்ற நிலை காரணமாக சுரண்டலுக்கு ஆளாகக் கூடாது. இந்த மாற்றம், அவர்களுக்கு சுதந்திரமாக வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும்.”
இந்த நடவடிக்கை, பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள், உணவக பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |