UK Health and care workers விசா: விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
பிரித்தானியா, வெளிநாட்டு முதியோரைக் கவனித்துக்கொள்ளும் care worker பணி செய்வோர், சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கும் விசாக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கிய பிரித்தானியா
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகக் கூறி, care worker பணி செய்வோர், தங்களுடன் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர தடை விதித்தார் முந்தைய அரசின் உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி.
அத்துடன், சர்வதேச மாணவர்கள் தொடர்பிலான விதிகளும் கடுமையாக்கப்பட்டன.
விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறைந்தது
புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததால், இப்போது சுகாதாரப் பணிகள் மற்றும் care worker பணி செய்ய வருவதற்காக விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 81 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது.
அத்துடன், விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை சரிந்ததால் ஏற்பட இருக்கும் பொருளாதார பாதிப்பு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம், ஏற்கனவே தட்டுப்பாடு நிலவும் care worker துறையில், தட்டுப்பாடு மேலும் அதிகமாகும் நிலையும் உருவாகியுள்ளதால், சுகாதாரத்துறையிலும் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |