பிரித்தானியர்களே எச்சரிக்கை! இதைக் கண்டால் தொடாதீங்க... மரணம் வரை செல்லும் அபாயம்
பிரித்தானியாவில் புயல் காரணமாக கடற்கரையில் முள்ளங்கி போன்று இருக்கும், அதிக நச்சுத்தன்மை கொண்ட வேர் தென்பட்டுள்ளதால், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு இங்கிலாந்தில் இருக்கும் Cumbria-வின் Egremont-க்கு அருகில் உள்ள St Bees கடற்கரையில், Hemlock water dropwort roots என்றழைக்கப்படும், கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேர்கள் காணப்பட்டுள்ளன.
இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் பார்ப்பதற்கு அப்படியே முள்ளங்கி போன்று இருக்கும்.
பிரித்தானியாவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல்கள் காரணமாக இந்த தாவரங்கள், பிடுங்கப்பட்டு, கடற்கரையில் அலையால் அடிக்கப்பட்டும் அதன் பின் மிதந்து ஒதுங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனால் இதைக் கண்ட கடலோர காவல்படையினர் இது குறித்து அஞ்சுகின்றனர். ஏனெனில் இது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கடுமையான தீங்கை விளைவிக்க கூடியது.
குறித்த தாவரமானது, நீரோடைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற பகுதிகளில் வளரக்கூடியது. இது ஆழமற்ற நீரில் சுமார் ஒரு மீற்றர் உயரத்திற்கு வளரும் தன்மை கொண்டது.
இது நச்சுத்தாவரம் என்று கூறப்பட்டுள்ளது. இது, oenanthetoxin எனப்படும் சக்திவாய்ந்த neurotoxin-ஐ கொண்டது. வலியை தூண்டும் தன்மை கொண்டது. இதனால் சில நேரங்களில் திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம்.
இதனால் இதற்கு இறந்த மனிதனின் விரல்கள் என்ற புனைப்பெயரும் உண்டு, இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் விஷத்தன்மை கொண்டது. ஒரு சிறியது துண்டு சாப்பிட்டால் கூட ஆபத்தானது என்று எச்சரித்துள்ளனர்.
நீங்கள் ஏதேனும் கடற்கரையில் இதைக் கண்டால் உடனடியாக Copeland Borough சபைக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து மீட்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நாய் வைத்திருப்பவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த தாவரத்தை தொடக் கூட வேண்டாம். இந்த மாதிரியான எந்தவொரு தாவரத்தைக் கண்டால் உடனடியாக Copeland Borough பெருநகர சபைக்கு தெரிவியுங்கள்
நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஒரு வேளை இதை உட்கொண்டிருக்கலாம் என்று நினைத்தால், உடனடியாக கால்நடை உதவி மருத்துவரை நாடும் படி அறிவுறுத்துகிறோம்
.
இந்த தாவரம், மனிதர்களுக்கு, உடலில் பல அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

