புறாக்களை தொந்தரவு செய்யக்கூடாது., பிரித்தானிய அரசு எச்சரிக்கை
பிரித்தானியாவில் மக்கள் புறாக்களை தொந்தரவு செய்யக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் புறாக்களை (doves or pigeons) பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை தொந்தரவு செய்யக்கூடாது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி புறாக்களை தொந்தரவு செய்தால் சிறை தணடனை அல்லது அபராதம் விதிக்கப்படும்
Columbidae என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த பூர்வீக பிரித்தானிய பறவைகள் பிப்ரவரி மாதத்திலேயே தங்கள் இனப்பெருக்க காலத்தைத் தொடங்குகின்றன, எனவே இந்த முக்கியமான காலகட்டத்தில் அவற்றைத் தொந்தரவு செய்யவோ அல்லது அவற்றின் கூடுகளுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பறவைகள் அவற்றின் கூடுகளை உருவாக்கும் முக்கிய காலமாக இருப்பதால், அவற்றின் கூட்டங்களை சேதப்படுத்துவது அல்லது பறவைகளை பாதிப்பது பிரித்தானியாவின் wild Bird Act 1988 படி சட்டவிரோதமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Warning issued to anyone with doves or pigeons in garden, UK doves or pigeons