புடினுக்கு பிரித்தானியா தரப்பிலிருந்து ஒரு எச்சரிக்கை
போலந்து நாட்டுக்குள் அத்துமீறிய ரஷ்யாவுக்கு பிரித்தானியா தரப்பிலிருந்து ஒரு எச்சரிக்கை செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
புடினுக்கு ஒரு எச்சரிக்கை
போலந்து நட்டுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவிய விடயம் பெரும் பரபரப்பையும் போர்ப்பதற்றத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், அந்த தாக்குதல் பொறுப்பற்ற மற்றும் அபாயகமான செயல் என பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான ஜான் ஹீலி (John Healey) தெரிவித்துள்ளார்.
அந்த தாக்குதல்களுக்குப் பின் போலந்துக்கு மேலான வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து திட்டமிடுமாறு தான் பிரித்தானிய ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
PA Wire
மேலும், லண்டனில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், புடினுக்கு ஒரு செய்தியையும் தெரிவித்துள்ளார்.
உங்கள் அத்துமீறல்கள், எங்கள் நேட்டோ நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குத்தான் வழிவகுக்கும் என்பதே நாங்கள் புடினுக்கு கூறும் செய்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
AFP/Slowo Podlasia/AFP via Getty
உங்கள் அத்துமீறல்கள், உக்ரைனுடன் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்னும் எங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்தவே வழிவகை செய்கின்றன என்று கூறியுள்ள ஜான் ஹீலி, பாதுகாப்பான ஒரு ஐரோப்பாவுக்கு ஒரு வலிமையான உக்ரைன் தேவை என்பதையும், ஐரோப்பாவின் பாதுகாப்பு உக்ரைனில் துவங்குகிறது என்பதையுமே உங்கள் அத்துமீறல்கள் நினைவுபடுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |