பிரித்தானியாவில் நேருக்கு நேர் மோதிய கார்கள்: இறுதியில் 2 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவின் வார்விக்ஷயரில் வெள்ளிக்கிழமை நடந்த கார் மோதல் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் விபத்து
பிரித்தானியாவின் வார்விக்ஷயரில் ஷிப்ஸ்டன்-ஆன்-ஸ்டோர் அருகே பி4035 கேம்ப்டன் சாலையில் மாலை 4 மணிக்கு பிறகு இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 17 வயது சிறுவனும் 16 வயது சிறுமியும் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தில் சிக்கிய 2 வாலிபர்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு தாய் என ஐந்து பேர் வரை பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
google
இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற ஃபியட் 500 கார் மோதியதில், அவர்கள் அனைவரும் பலத்த காயங்களுக்கு ஆளானார்கள், ஆனால் மருத்துவமனையில் தற்போது நிலையாக உள்ளனர்.
விசாரணை
மோதலின் சூழ்நிலைகளை ஒன்றாக இணைக்க இப்போது விசாரணை நடந்து வருகிறது என்று பொலிஸார தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வார்விக்ஷயர் காவல்துறையின் தீவிர மோதல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மைக்கேல் ஹன்ட்லி வழங்கிய குறிப்பில், எங்கள் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு, செல்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்புப் பயிற்சி பெற்ற குடும்பத் தொடர்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது டாஷ் கேம் காட்சிகளை வைத்திருக்கும் எவரும் பொலிஸாரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.