பிரித்தானியாவில் கடலுக்கடியில் உளவு வேலை பார்க்கும் விளாடிமிர் புடின்
பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பதாக நம்பப்படும் ரஷ்ய உளவு சென்சார்கள் இங்கிலாந்து கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரகசிய நடவடிக்கை
இது முக்கியமான உள்கட்டமைப்பைக் கண்காணிக்கவும், சேதப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் ரஷ்யாவின் இரகசிய நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்றே அதிகாரிகள் தற்போது அஞ்சுகின்றனர்.
ரஷ்ய உளவு தொடர்பில் தற்போதைய இந்த கண்டுபிடிப்பு என்பது ஒரு தீவிர தேசிய பாதுகாப்பு அபாயமாக கருதப்படுகிறது ஆனால் அது பகிரங்கப்படுத்தப்படவில்லை.
சில உளவு சென்சார்கள் கரை ஒதுங்கிய நிலையில், மற்றவை ராயல் நேவி மைன்ஹன்டர் கப்பல்களால் கண்டறியப்பட்டன. பிரித்தானியாவின் நான்கு வான்கார்ட்-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க ரஷ்யாவால் அவை பொருத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் நம்புகின்றன.
கடல் எல்லை அருகே
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், இதுபோன்ற நடவடிக்கைகள் கேபிள்கள், பைப்லைன்கள் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள முதன்மையான அமைப்புகளை குறிவைப்பதே இலக்காக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஆண்டில் ரஷ்ய கப்பல்கள் பல முறை பிரித்தானிய கடல் எல்லை அருகே காணப்பட்டன. அதுவும் மிக முக்கியமான உள்கட்டமைப்பு அருகே தென்பட்டுள்ளன.
இதனிடையே, ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு சொந்தமான சூப்பர் படகுகள் நீருக்கடியில் உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |