இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் இடியுடன் கனமழை எச்சரிக்கை!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் இன்று மாலை மின்னல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்பகுதிகளில் வீடுகள் மற்றும் தொழில்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து இருப்பதாகவும், போக்குவரத்து தடைகள் மற்றும் மின்தடை ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு வரை மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வேல்ஸ், தென்மேற்கு மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில், மழையின் காரணமாக 2 முதல் 3 மணி நேரத்துக்குள் 40 மிமீ வரை மழை பெய்யும் என்பதால் பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கில் உள்ள கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை மிகுந்த பகுதிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மத்திய மற்றும் தென் பிரதேசங்களில் கூடுதல் கனமழை மற்றும் இடி மின்னல் சாத்தியம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிர்க் சூறாவளி பிரித்தானியாவின் தெற்கு நோக்கி நகரும் என்றும், அதற்கு பதிலாக வடக்கு பிரான்சில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK weather, Thunderstorm warning issued by UK Met Office, England and Wales