புத்தாண்டு தினத்தில் பிரித்தானியாவில் 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவில் 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி 2-ஆம் திகதி வியாழன் வரை பனி, மழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் பிரித்தானிய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை ஸ்காட்லாந்தில் பனி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 1-ஆம் திகதி, பனி தெற்கு இங்கிலாந்தில் பரவுவதுடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடுமையான காற்றும் கன மழையும் வீசும்.
மஞ்சள் எச்சரிக்கை ஜனவரி முதலாம் நாள் காலை 9 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை நீடிக்கும்.
Met Office எச்சரிக்கை
- கடுமையான காற்று போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- சாலை, ரயில், விமான மற்றும் படகு சேவைகளில் தாமதம் அல்லது ரத்து செய்யப்படும்.
- மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது, இது மொபைல் நெட்வொர்க்கையும் பாதிக்கக்கூடும்.
- கடலில் பெரும்பாய்ச்சல்கள் ஏற்பட்டு, ஆபத்தான சூழலை உருவாக்கலாம்.
பனி தொடர்பான தனி எச்சரிக்கையில், வடக்கு இங்கிலாந்து நகரங்கள் போன்ற பகுதிகளில் 2-5 செ.மீ. பனியும், சில இடங்களில் 20-25 செ.மீ. உயரம் வரை பனியும் அடிக்கக்கூடும்.
மின் துண்டிப்புக்கு முன்னதாக, டார்ச், பேட்டரிகள், மொபைல் போன் பவர் பேங்க் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு Met Office அறிவுறுத்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று மின்வெட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 130 பகுதிகளின் முழு பட்டியல்:
Dumfries and Galloway, East Lothian, Edinburgh, Midlothian Council, Scottish Borders, West Lothian, East Ayrshire, East Dunbartonshire, East Renfrewshire,
Glasgow, North Ayrshire, North Lanarkshire, Renfrewshire, South Ayrshire, South Lanarkshire, West Dunbartonshire, Derby, Derbyshire,
Leicester, Leicestershire, Lincolnshire, Northamptonshire, Nottingham, Nottinghamshire, Rutland, Bedford, Cambridgeshire, Central Bedfordshire, Essex, Hertfordshire, Luton, Norfolk,
Peterborough, Southend-on-Sea, Suffolk, Thurrock, Bracknell Forest, Brighton and Hove, Buckinghamshire, East Sussex, Greater London, Hampshire,
Isle of Wight, Kent, Medway, Milton Keynes, Oxfordshire, Portsmouth, Reading, Slough, Southampton, Surrey, West Berkshire, West Sussex, Windsor and Maidenhead,
Wokingham, Darlington, Durham, Gateshead, Hartlepool, Middlesbrough, Newcastle upon Tyne, North Tyneside, Northumberland, Redcar and Cleveland, South Tyneside,
Stockton-on-Tees, Sunderland, Blackburn with Darwen, Blackpool, Cheshire East, Cheshire West and Chester, Cumbria, Greater Manchester, Halton,
Lancashire, Merseyside, Warrington, Bath and North East Somerset, Bournemouth Christchurch and Poole, Bristol, Cornwall, Devon, Dorset,
Gloucestershire, North Somerset, Plymouth, Somerset, South Gloucestershire, Swindon, Torbay, Wiltshire, Blaenau Gwent, Bridgend, Caerphilly,
Cardiff, Carmarthenshire, Ceredigion, Conwy, Denbighshire, Flintshire, Gwynedd, Isle of Anglesey, Merthyr Tydfil, Monmouthshire, Neath Port Talbot,
Newport, Pembrokeshire, Powys, Rhondda Cynon Taf, Swansea, Torfaen, Vale of Glamorgan, Wrexham, Herefordshire, Shropshire, Staffordshire,
Stoke-on-Trent, Telford and Wrekin, Warwickshire, West Midlands Conurbation, Worcestershire, East Riding of Yorkshire, Kingston upon Hull,
North East Lincolnshire, North Lincolnshire, North Yorkshire, South Yorkshire, West Yorkshire, York.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Snow, UK Weather, UK Yellow Warning