ரியல் மாட்ரிட் வெற்றி கொண்டாட்டம்: 50க்கும் மேற்பட்டோர் கைது!
ரியல் மாட்ரிட் அணிக்கும், பொருசியா டார்ட்மண்ட் அணிக்கும் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது குழப்பத்தை ஏற்படுத்திய 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிப் போட்டி
பிரித்தானியாவின் Wembley மைதானத்தில் சனிக்கிழமை ரியல் மாட்ரிட் அணிக்கும், பொருசியா டார்ட்மண்ட் அணிக்கும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடைசி நிமிடங்களில் டேனி கார்வஜால் மற்றும் வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் அடுத்தடுத்த கோல்கள் அடித்ததன் மூலம் இந்த வெற்றி கிடைத்தது.
50 க்கும் மேற்பட்டோர் கைது
இந்த போட்டி தொடங்கி சில நிமிடத்திலேயே மூன்று நபர்கள் மைதானத்திற்குள் புகுந்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும், டிக்கெட் இல்லாமல் போட்டியை பார்க்க முயன்ற ரசிகர்களின் சட்டவிரோதமாக நுழைவு முயற்சித்த பெரும்பாலானோர் தடுக்கப்பட்டது” என்றும் லண்டன் பொலிஸார் உறுதிபடுத்தினார்.
அதே சமயம் Wembley மைதானத்தில் இறுதிப் போட்டி நடந்த போது 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக லண்டன் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் மைதானத்திற்குள் புகுந்து களத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக T/Commander Louise Puddefoot கூறுகையில், “ Wembley மைதானத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - ஐந்து பேர் மைதானத்திற்குள் நுழைந்ததற்காகவும், மற்றவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீற முயன்றதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |