17 வயதான பிரித்தானிய இளம்பெண் எங்கே? லண்டனில் உள்ளாரா? முக்கிய தகவல்
பிரித்தானியாவில் 17 வயதான டீன் ஏஜ் இளம்பெண் மாயமாகியுள்ளார்.
West Yorkshire-ஐ சேர்ந்த Thi Thu Tran என்கிற Keira தான் காணாமல் போயிருக்கிறார். ஒல்லியான உருவம் கொண்ட Keira 5 அடி உயரம் கொண்டிருப்பார்.
Keira காணாமல் போனது தொடர்பான தகவலை பொலிசார் நேற்று இரவு வெளியிட்டனர்.
Concern for missing 17 YO female Thi Thu Tran aka ‘KEIRA’ from Sowerby Bridge. Slim build approximately 5ft. Any sightings log WYP-20220619-0665 May also be in the Leeds or London area. pic.twitter.com/cyqd3whhwk
— West Yorkshire Police (@WestYorksPolice) June 20, 2022
அவர் லீட்ஸ் அல்லது லண்டன் பகுதியில் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். Keira காணாமல் போனது பொலிசாருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் அவரை அடையாளம் காண புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.