பிரித்தானிய கடற்கரையில் 3 நாட்களில் 4 சடலங்கள்: தொடர் மரணங்களால் பரபரப்பு!
விட்பை(Whitby) நகரின் சான்ட்சென்ட் (Sandsend) அருகே உள்ள கடற்கரையில், பாறைகளுக்கு அடியில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இந்த பகுதியில் கண்டெடுக்கப்படும் நான்காவது சடலம் இதுவாகும்./// சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயது மதிக்கத்தக்க உள்ளூர் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலை 11.01 மணியளவில் அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் சடலத்தை கண்டறிந்து அவசர சேவைக்கு தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து பொலிஸார், "இந்த பெண் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று நம்புகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை" என்று கூறியுள்ளனர்.
மேலும், இந்த நான்கு மரணங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என்றும் காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பு, ஜூலை 30 அன்று விட்பை பாறைகளில் இருந்து தவறி விழுந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் உயிரிழந்தனர்.
ஜூலை 31 அன்று, 60 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் பாறைகளுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, ஒவ்வொரு மரணத்திற்கான சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் வகையில் அப்பகுதியில் தொடர்ந்து பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |