பிரித்தானியாவில் கொரோனா இறப்பு குறைவாக இருக்க இது தான் காரணம்! தடுப்பூசி நிபுணர்
பிரித்தானியாவில் கொரோனா இறப்பு குறைவாக இருப்பதற்கு முக்கிய காரண, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளே காரணம் என்று தடுப்பூசி நிபுணா் கிளைவ் டிக்ஸ் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில், பிரித்தானியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
இது குறித்து பிரித்தானியாவின் தடுப்பூசி பணிக் குழு தலைவர் கிளைவ் டிக்ஸ் கூறுகையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி தீவிர கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பை அளித்து வருகிறது. பிரித்தானியாவில் பத்து லட்சம் பேருக்கு 1.7 பேர் என்ற அளவில் இறப்பு விகிதம் உள்ளது.
அதுவே, ஐரோப்பிய யூனியனில் இது 10 லட்சம் பேருக்கு 4 என்ற அளவில் உள்ளது. பிரித்தானியாவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளே காரணம் என்று கருதுவதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாஇல் கொரோனாவால் 1.18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1.4 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.