பிரித்தானியாவில் புலி தாக்கி உயிரிழந்த நபர்: வெளியான உயிரிழந்தவரின் விவரங்கள்
UK Wildlife Park Tiger attack victim named: பிரித்தானியாவில் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கி உயிரிழந்த நபரின் பெயர் மற்றும் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
புலி தாக்கி உயிரிழந்த நபர்
பிரித்தானியாவின் டான்காஸ்டர்(Doncaster) அருகே உள்ள யார்க்ஷயர் வனவிலங்கு பூங்காவின்(Yorkshire Wildlife Park) பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த நபர் புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொதுமக்கள் பார்வையிடும் பகுதியில் இருந்து புலிகள் அடைக்கப்பட்ட பகுதிக்குள் திடீரென குதித்த நபரை அங்கு வசித்து வந்த சைபீரியன் வகை புலி கொடூரமாக தாக்கியது. விரைந்து செயல்பட்ட வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் அந்த நபரை மீட்டு, மருத்துவ குழுவினரின் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உயிரிழந்தவரின் விவரங்கள் வெளியீடு
இந்நிலையில் யார்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கி உயிரிழந்த நபரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் படி உயிரிழந்த நபர் வில்லியம் சாப்மேன் (William Chapman) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் அவரது புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் வில்லியம் சாப்மேனை இறந்தவர் போல படுத்துக் கொள்ளுங்கள் என கத்தி அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த ஆலோசனைகளை கேட்காத அவர் புலி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வில்லியம் சாப்மேனை தாக்கிய புலியை கருணை கொலை செய்வது தொடர்பான விவாதங்கள் எழுந்த நிலையில் அதனை பூங்கா நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
https://t.co/6rdieTvUhD
— Yorkshire Wildlife Park 🦁 (@YorkshireWP) October 11, 2026
ஆனால் வனவிலங்கு பூங்காவிற்கு உரிமம் வழங்கும் அமைப்பான டான்காஸ்டர் நகரப் பேரவை பூங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இதனால் கடந்த 4 நாட்களாக பூங்கா மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.