தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்ட பிரித்தானியா
பிரித்தானியா, தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.
பின்னணி
அமெரிக்கா, தொடர்ந்து 11 இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்திவருகிறது.

அத்துடன், ஈரான், ஏவுகணையையோ, ரொக்கெட்டையோ, ட்ரோனையோ அல்லது எந்த வித ஆயுதத்தையானாலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் ஒரு கப்பலை நோக்கி ஏவுமானால், பதிலுக்கு, ஈரானின் தலைநகர் அல்லது அதன் அருகிலுள்ள ஒரு பாலம் அல்லது ஒரு அணு மின் நிலையத்தை அமெரிக்கா குண்டு வீசி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஆக, இப்படியொரு பதற்றமான சூழல் நிலவுவதைத் தொடர்ந்தே, பிரித்தானியா தனது தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.
ஈரானின் நிலவும் பாதுகாப்புச் சூழலை கருத்தில் கொண்டு தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து தற்காலிகமாக திரும்ப அழைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, தூதரகப் பணிகள் ஈரானுக்கு வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரித்தானியர்கள் ஈரானுக்கு பயணிக்கவேண்டாம் என்றும், ஈரானிலிருக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரித்தானிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |