ஈரானில் இருந்து தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா: 12வது நாளாக தொடரும் தாக்குதல்
ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகளை பிரித்தானிய தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளது.
தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் தங்களுடைய செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இணைய வழியில் தூதரக பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானை குறிவைத்து தொடர்ந்து 12 வது நாளாக அமெரிக்கா தங்களது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய தலைநகரில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினரும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |