பிரித்தானியாவில் பெற்ற பிள்ளையை அடித்தே கொன்ற இளம் பெண் கைது!
பிரித்தானியாவில் மூன்று வயது சிறுவனை அடித்து கொலை செய்த இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷையரில், ஜாக்ஸ்டேல் மெயின் ரோட்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த ஆகஸ்ட் 7-ஆம் திகதி போலீசார் அழைக்கப்பட்டனர்.
அந்த வீட்டில், கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 3 வயது சிறுவனை பொலிஸார் மீட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இரண்டு நாட்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட நிலையில், குழந்தை ஆகஸ்ட் 9-ஆம் திகதி உயிரிழந்தான்.
இந்நிலையில், சிறுவனின் மரணத்திற்கு காரணமான அவனது தாய் 22 வயதான லீலா பிக்கர் (Leila Picker) கைது செய்யப்பட்டார்.
லீலா பிக்கர், தனது மகனை உயிர்போகும் அளவிற்கு அடித்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிறுவனின் மரணம் தொடர்பாக தற்போது வேறு யாரையும் சந்தேகிக்கவில்லை என்றும் கைது செய்யவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.