66 வயது முதியவருக்கு லண்டனில் நடந்த பயங்கரம்: 30 வயது இளம்பெண் கைது
பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் 30 வயது இளம்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள Enfield பகுதியில் 66 வயது முதியவர் கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதையடுத்து பொலிஸார் மற்றும் அவசர சேவையினர் வெள்ளிக்கிழமை 7.20pm மணிக்கு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இருந்த போதிலும், 66 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை
உயிரிழந்த முதியவர் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படாவிட்டாலும், முதியவரின் உறவினர் என்று நம்பப்படும் நபர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இளம் பெண் கைது
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் 30 வயது இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.
இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அல்லது தகவல்கள் இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு துப்பறியும் தலைமை ஆய்வாளர் லாரா நெல்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |