மறுசுழற்சி மையத்தில் கிடந்த பிறந்த குழந்தையின் சடலம்., பிரித்தானிய பெண் கைது
பிரித்தானியாவில் குப்பை மறுசுழற்சி மையத்தில் புதிதாக பிறந்த குழந்தை இறந்து கிடந்ததை அடுத்து, பிறப்பை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிறந்த குழந்தை
இங்கிலாந்தின் சோமர்செட், யோவில் பகுதியில் லுஃப்டன் டிரேடிங் எஸ்டேட்டில் உள்ள இடத்தில் ஒரு ஊழியர் பிறந்த குழந்தையின் உடலைக் கண்டுபிடித்தார். இதையடுத்து, நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக, அவான் மற்றும் சோமர்செட் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.துப்பறியும் இன்ஸ்பெக்டர் பென் லாவெண்டர் இது குறித்து கூறியதாவது: "இது மிகவும் சோகமான மற்றும் வேதனையான சம்பவம். என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, மேலும் பிரேத பரிசோதனையின் முடிவுகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த நேரத்தில் குழந்தையின் மரணம் விவரிக்க முடியாததாக கருதுகிறோம்" என்று கூறினார்.
Picture: LBC / Alamy
சந்தேகத்தின்பேரில் சந்தேகத்தின்பேரில் பெண் கைது
இதனிடையே, இறந்த குழந்தையின் தாய் என கருதப்படும் பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அவர், பொருத்தமான சட்டப் பாதுகாப்புகளுடன் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
'பொலிஸ் காவலில் இருக்கும் போது, அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த துயரமான சம்பவத்தின் சூழ்நிலைகளை ஊகிக்க வேண்டாம் என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று இன்ஸ்பெக்டர் பென் லாவெண்டர் கூறினார்.
லுஃப்டன் டிரேடிங் எஸ்டேட்டில், யோவில் மறுசுழற்சி மையம் மற்றும் YPH கழிவுப் பிரிப்பு மற்றும் மறுசுழற்சி வசதி என இரண்டு மறுசுழற்சி மையங்கள் உள்ளன.