லண்டனில் 5 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! இளம் பெண் கைது..
லண்டனில் 5 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக இளம் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் லண்டனின் கிழக்கில், Ealing பகுதியில் உள்ள லேபோர்ன் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில், செவ்வாய்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
குறித்த வீட்டில், 5 வயது சிறுமி இரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு மெட்ரோபொலிட்டன் பொலிஸார் மற்றும் துணை மருத்துவர்களும் வந்தனர்.
சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிந்ததாக அவர்கள் உறுதி செய்தனர். பின்னர் அக்குழந்தையை கொலை செய்ததாக கருதப்படும், அங்கிருந்த 31 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
சிறுமியின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியும் கைது செய்யப்பட்ட பெண்ணும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இருவரின் விவரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.
