கொரோனாவால் 7 வாரம் கோமாவில் இருந்த பெண்! கண்விழித்த போது காத்திருந்த ஆச்சரியம்
பிரித்தானியாவில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவர் கொரோனாவால் 7 வாரங்கள் கோமாவில் இருந்த நிலையில், குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிரித்தானியாவில் மான்செஸ்டரில் உள்ள Tyldesley நகரத்தைச் சேர்ந்தவர் லாரா வார்டு (Laura Ward). 33 வயதாகும் அவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் உதவியாளராவார். அவர் கடந்த செப்டம்பரில் தனது 31 வார கர்ப்ப காலத்தில் இருந்தபோது, கோவிட் நோயால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
சில நாட்களில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மோசமடைந்த காரணத்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிய அவர் பரிசோதனை செய்யப்பட்டார்.
அப்போது, குழந்தையை குறிக்கப்பட்ட பிரசவ நாளுக்கு முன்பாகவே சீக்கிரமாக வெளியே எடுப்பது நல்லது என பருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
மிகவும் மோசமான நிலைமையில் இருந்த லாரா அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க தலையை ஆட்டியதாக கூறப்பட்டது. அவரது கணவர் ஜான் லீஸ் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார், ஆனால் கோவிட் வரம்புகள் காரணமாக அறுவை சிகிச்சை அறைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் அவர் உடனடியாக அவசரகால சி-பிரிவுக்கு மாற்றப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், கடந்த 7 வாரங்களாக அவர் மயக்க நிலையில் இருந்து, அக்டோபர் 15-ஆம் திகதி கோமாவில் இருந்து முழித்து பார்த்தார். அவரால் தனது உடலை அசைக்கமுடியவில்லை.
மேலும், அவர் கடைசியாக கோவிட் வார்டுக்குள் நுழைந்ததைத் தவிர அதன் பின்னர் நடந்த எதுவும் அவருக்கு தெரியவில்லை, அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது என்பது உட்பட.
செப்டம்பர் 30-ஆம் திகதியை அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இரண்டு வாரங்கள் கழித்து தனது குழந்தையை பார்த்தார் லாரா. இருப்பினும் அவரால் தனது குழந்தையை தூக்கமுடியவில்லை.
பின்னர், டிசம்பர் தொடக்கத்தில் அவர் மீண்டும் எழுந்து நடக்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்தார். இப்போது, அறுவை சிகிச்சைக்கு பிறகு தாய் மற்றும் மகள் இருவரும் நலமாக இருகின்றனர்.
லாராவின் மகள் ராயல் போல்டன் மருத்துவமனையில் பிரசவித்து 3lb 7oz எடையுடன் இருந்தார். பின்னர் ஐந்து வாரங்கள் கழித்த பிறகு, குழந்தை 10lb 7oz எடையுடன் ஆரோக்கியமாக இருந்ததது.
இந்த ஆச்சரியமான சம்பவம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து, வைரலாக பேசப்படுகிறது.