30வது திருமணநாளில் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
British woman dies in maldives: மாலத்தீவில் திருமணநாள் பயணத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் உயிரிழந்தார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 30வது திருமணநாள் பயணத்தின்போது, மாலத்தீவில் Snorkelling செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார்.
மாலத்தீவில் கொண்டாட்டம்
பிரித்தானியாவைச் சேர்ந்த 57 வயது பெண் பமீலா டேவிஸ். இவர் தனது கணவர் மார்ட்டின் டேவிஸுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் தங்களது 30வது திருமணநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக பமீலா Snorkelling எனும் கடலுக்கு அடியில் செல்லும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக துயரமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் தெரியவில்லை.
விசாரணை
இதனையடுத்து பமீலாவின் உடல் ஐக்கிய இராச்சியத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது; அவரது மரணம் குறித்த விசாரணை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பமீலாவின் மகன் லாயிட் பகிர்ந்து கொண்ட அஞ்சலியில், "அம்மா இதை எப்படி எழுவது அல்லது இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை.
இப்போது என்னிடம் வார்த்தைகளே இல்லை; இனிமேலும் வார்த்தைகள் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்; என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களை நேசிப்பேன், உங்களை மிகவும் இழப்பேன்" என தெரிவித்துள்ளார்.
