பிரித்தானியாவில் உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்: மரண விசாரணையில் தெரிய வந்த உண்மை
Uk woman died undergoing bbl treatment: பிரித்தானியாவில் அழகு சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழந்த விவகாரத்தில், முக்கிய விடயம் விசாரணை மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானியாவில் பிரேசிலியன் பட் லிஃப்ட் சிகிச்சைக்குப் பிறகு பெண் உயிரிழந்த விவகாரத்தில், கிடைக்காத பரிபூரணத்தை அடைய முயன்றதாக விசாரணை மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அழகு சிகிச்சை
கடந்த 2024-ஆம் ஆண்டில், Gloucester-யின் சான்ட்ஹர்ஸ்ட் சாலை பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அதன் பின்னரான விசாரணையில், குறித்த பெண் 33 வயதான ஆலிஸ் வெப் என்றும், ஐந்து பிள்ளைகளின் தாயான அவர் அழகு சிகிச்சையைப் பெற்ற பிறகு உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், ஆலிஸிற்கு சிகிச்சை மேற்கொண்ட ஜோர்டான் பார்க்கே, காவல்துறையின் விசாரணையில் இருந்தபோது பிப்ரவரியில் உயிரிழந்தார்.
ஏழு மடங்கு
Gloucester மரண விசாரணை நீதிமன்றத்தில், ஆலிஸிற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட ஏழு மடங்கு அதிக Filler ஊசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிடைக்காத பரிபூரணத்தை அடைய பிரேசிலியன் பட் லிஃப்ட் சிகிச்சையை ஆலிஸ் மேற்கொண்டிருக்கிறார். அப்போது ஜோர்டான் பார்க்கேயின் கவனக்குறைவினால் மரணம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
