கணவனின் சாம்பலை உண்ணும் மனைவி! பிரித்தானியாவில் வசிக்கும் விசித்தர பெண்மணி
பிரித்தானியாவில் 26 வயது பெண் ஒருவர் தன் கணவரின் சாம்பலை தினமும் சாப்பிட்டு வருகிறார்.
பிரித்தானியாவை சேர்ந்த Casie எனும் 26 வயது பெண், 2009-ஆம் ஆண்டு Sean என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு கணவர் சீயான் ஆஸ்துமா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பிறகு, கேசி தனது கணவரின் சாம்பலை எல்லா இடங்களிலும் தன்னுடன் எடுத்துச் செல்லத் தொடங்கினார்.
"மளிகைக் கடை, ஷாப்பிங், சினிமா, உணவகம் என நான் எங்கு சென்றாலும் அவரை (சாம்பலை) அழைத்துச் செல்கிறேன்," என்று கேசி கூறுகிறார்.
இதில் என்ன இருக்கிறது என சாதாரணமாகத் தோன்றலாம். அனால், அவர் அந்த சாம்பலைச் சுமந்து செல்வது மட்டுமல்ல, அவர் அதனை தினமும் சாப்பிடுவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
Image: My strange addiction/TLC
"நான் அவரை அப்படியே துடைத்தெறிய விரும்பவில்லை, அது (சாம்பல்) என் கணவர், அதனால் நான் அவரை என் விரல்களில் எடுத்து நக்கி சுவைத்துக்கொள்கிறேன். என்னால் அதை நிறுத்த முடியவில்லை, நான் நான் என் கணவரை சாப்பிடுகிறேன்" என்று கேசி கூறுகிறார்.
மனிதச் சாம்பலை சாதாரண உணவைப் போல சாப்பிட முடியாது, எனவே Casie மெதுவாக தன் விரலைச் சுற்றிச் சாம்பலைச் சுற்றிக் கொண்டு நக்குகிறார்.
இருப்பினும், அந்த சாம்பலின் சுவை தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், கேசி அதற்கு பழகிவிட்டதாகவும் இப்போது அதை விரும்ப ஆரம்பித்ததாகவும் கூறுகிறார்.
Image: My strange addiction/TLC
அவர் சாம்பலின் சுவையை விரும்பவில்லை என்றாலும், அதை சாப்பிடுவது அவளுக்கு மகிழ்ச்சியையும் அட்ரினலின் விரைவையும் தருகிறது என்று அவர் கூறுகிறார்.
கேசியின் இந்த கதை முதலில் மக்களின் விசித்திரமான போதை பற்றிய நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

