வெறும் 2 சென்டிமீற்றரால் விமானத்தில் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்
பிரித்தானிய பெண்ணொருவர் விமான பயணத்தின்போது தனது Handbag கூடுதலாக 2 சென்டிமீற்றர் பெரியதாக இருந்ததால் அபராதம் செலுத்தியுள்ளார்.
விமானப் பயணத்தில் ஒவ்வொரு பயணியும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளன.
அதில் முக்கியமான ஒன்று, கைப்பைகள் மற்றும் சாதாரணப் பைகளை நிறைவிலும் அளவிலும் குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருப்பது ஆகும்.
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டில் வசிக்கும் 45 வயதான கேத்ரின் வாரிலோவ் (Catherine Warrilow) என்பவர், இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு பயணம் செய்யும்போது இந்த விதிமுறைகளின் விளைவுகளை சந்திக்க நேர்ந்தது.
அவரது கைப்பை விமான நிறுவனத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் 2 செ.மீ அளவுக்கு கூடுதலாக இருந்ததால், அவருக்கு 75 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 28500) அபராதம் விதிக்கப்பட்டது.
விமானத்தில் செல்லும் முன், விமான பணியாளர் கேத்ரினை நிறுத்தி, அவரது கைப்பை அளவுக்கு மேலே இருப்பதாக தெரிவித்தார்.
கேத்ரின் சில பொருட்களை எடுத்துக்கொண்டு, கைப்பையை சிறிது குறைத்து, அதை சுருக்க முயற்சித்தும் அனுமதி பெற முடியவில்லை.
ஒரே வழியாக, 75 பவுண்டுகள் கட்டினால் மட்டுமே பையை உடன் எடுத்துச் செல்ல முடியுமென கூறினர்.
இந்த மோசமான அனுபவத்துடன், திரும்ப வரும் போதும் கூட, £35 கட்டி பையை செக்-இன் செய்ய வேண்டி வந்தது. இதனால் அவரின் பையின் மீதான செலவு £110-ஆக உயர்ந்தது.
பின்னர், அவர் புகார் அளித்து விமான நிறுவனத்திற்கும் மின்னஞ்சல் அனுப்பினார். இதற்குப் பதிலாக, விமான நிறுவனம் பணத்தை திருப்பிச் செலுத்தியது.
ஆனால் விதிமுறைகளை நிறைவேற்றவே பணியாளர்கள் இவ்வாறு செய்ததாகவும், நன்மையின் அடிப்படையில் பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் தெரிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK tourists warned as woman fined £75, Catherine Warrilow, Ryanair