கால்பந்து கிளப் கழிவறையில் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்: Cryptic pregnancy என்பது என்ன?
பிரித்தானியாவில் கால்பந்து போட்டியை காண சென்ற சார்லெட் என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து மைதானத்தில் பிறந்த குழந்தை
பிரித்தானியாவின் நார்போல்க், பிராட்வெல் பகுதியை சேர்ந்த சார்லெட் ராபின்சன் என்ற பெண் தான் கர்ப்பமாக இருந்தது தெரியாமலே லோவெஸ்டாஃப்ட் சஃபோல்க் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தின் கழிப்பறையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
29 வயதான சார்லேட் ராபின்சன் தன்னுடைய மகன் ஹென்றியின் இந்த எதிர்பாராத வருகை தன்னுடைய வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் அதிசயம் நடக்கும் என்பதற்கான சாட்சி என தெரிவித்துள்ளார்.
600 பேர் பார்வையாளர்களாக கலந்து கொண்ட கால்பந்து போட்டியின் போது சார்லேட்-க்கு திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, அப்போது ஏதோ உந்துதலை உணரவே, அதை கவனித்த சார்லேட் தனது குழந்தையின் தலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
கிரிப்டிக் கர்ப்பம்
இத்தகைய அறிகுறிகள் இல்லாத பிரசவம் கிரிப்டிக் கர்ப்பம்(Cryptic pregnancy) என்று அழைக்கப்படுகிறது.
அதாவது தனக்குள் குழந்தை வளர்வதை தாய் அறியாமலேயே இருப்பது ஆகும், இத்தகைய முறைகள் 2,500 கர்ப்பங்களில் ஒன்றுக்கு நிகழ்வதாக ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழக மகப்பேறு துறையின் தலைவர் லூயிஸ் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |