106 நாட்களில் 106 முறை மாரத்தான் ஓடிய பிரித்தானிய பெண்! புதிய கின்னஸ் உலக சாதனை
35 வயது பிரித்தானிய பெண் புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
106 நாட்களில் 106 மாரத்தான் ஓட்டங்களை முடித்துள்ளார்.
பிரித்தானியாவின் Derbyshire பகுதியைச் சேர்ந்த கேட் ஜெய்டன் (Kate Jayden) என்ற 35 வயது விளையாட்டு வீராங்கனை, தொடர்ந்து அதிக நாட்கள் மராத்தான் ஓட்டத்தை முடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவர் 106 நாட்களில் 106 மாரத்தான்களை முடித்து, அதிக நாட்கள் மாரத்தான் ஓட்டத்தை முடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 31, 2021 முதல் ஏப்ரல் 15, 2022 வரை மல்டி மைல் மராத்தானை முடித்தார்.
ஏற்கெனவே இதேபோல் 95 நாட்கள் மாரத்தான் ஓடிய அமெரிக்காவைச் சேர்ந்த அலிசா கிளார்க் (Alyssa Clark) என்பவரின் முந்தைய சாதனையை இப்போது கேட் ஜெய்டன் முறியடித்தார்.
அவர் ஆரம்பத்தில் 100 நாட்களில் 100 மராத்தான்களை (2620 மைல்கள்) முடிக்கவே திட்டமிட்டார். ஆனால், அவரது தன்னம்பிக்கை 106 நாட்கள் வரை அவரை இழுத்து சென்றது.
அதன்படி, அவர் மொத்தம் 2,819.6 மைல்கள் (4,472.67 கிலோமீற்றர்) தூரத்தை 106 நாட்களில் ஓடி கடந்துள்ளார். அதாவது ஒவ்வொரு நாளும் 42.195 கிலோமீற்றர் ஓடியுள்ளார்.
மனநல சேவைகள் மற்றும் அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு நன்கொடை அளிக்க நிதி திரட்டவே இந்த மாரத்தான் ஓட்டத்தை கேட் ஜெய்டன் ஓடியுள்ளார்.
இந்நிலையில், தனது கின்னஸ் சாதனை தொடர்பான பதிவுகளை ஜாடன் தனது இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களுடன் பகிர்ந்துள்ளார்.