13 பற்களை தானே பிடிங்கி எறிந்த பிரித்தானிய பெண்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பிரித்தானியாவில் தனது ஊரில் அரசு மருத்துவமனை (NHS) இல்லாததால், அவரே தனது 13 பற்களை பிடுங்கி எறிந்துள்ளார்.
டேனியல் வாட்ஸ் (Danielle Watts) என்ற 42 வயதான பெண், நாள்பட்ட ஈறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் Suffolk பகுதியில் உள்ள Bury St Edmunds நகரத்தில் வசிக்கும் அப்பெண், அருகில் தேசிய சுகாதார சேவை (NHS) இல்லாத காரணத்தினாலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவரது உள்ளூர் பல் மருத்துவமனை மூடப்பட்டதாலும் தனக்கு எந் உதவியும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அவரால் தனியார் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால், அவரே சொந்தமாக மொத்தம் 13 பற்களை பிடிங்கியள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநர்களாக வாழ்க்கை நடத்தும் 2 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்! வைரலாகும் புகைப்படம்
இப்போது அவருக்கு மொத்தம் 14 பற்கள் உள்ளன, அவற்றில் எட்டு பற்களை அவர் அகற்ற வேண்டும். அப்படி அகற்றினால் அவர் செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.
அவர் தனது பற்களில் உள்ள இடைவெளிகளை மறைக்க அடிக்கடி சிரிப்பதைத் தவிர்ப்பதாகக் கூறுகிறார்.
"நான் ஒவ்வொரு நாளும் இதனுடன் வாழ்கிறேன். நான் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறேன், நான் வேலைக்குச் செல்கிறேன், நான் என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன், நான் சிரிப்பதை எப்போது மறைத்து சமாளித்துக்கொண்டு இருக்கிறேன்- நான் மக்களுடன், எனக்குத் தெரிந்தவர்களுடன் கூட பேசுவதை வெறுக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
கனடாவில் ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத்தடை விதிக்க கோரிக்கை
டேனியல் வாட்ஸின் கதை, உள்ளூர் ஊடகங்களில் வெளியானதும் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியது.
இப்போது அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், அவர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். மேலும், முன்பின் தெரியாத ஒருவர் அவருக்கு 1,000 பவுண்ட் பணம் அனுப்பிய நிலையில், அவர் நெகிழ்ச்சியில் கண்ணீர்விட்டதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு உள்ளூர் கவுன்சிலரான கேட்டி பார்க்கர், டேனியல் வாட்ஸுக்கு தனியார் மருத்துவமனையில் பல் சிகிச்சையைப் பெறவும், மேலும் பற்கள் பிடுங்கப்பட்டவுடன் செயற்கைப் பற்களுக்கு பணம் செலுத்தவும் நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
வாட்ஸ் ஜூலை 14-ஆம் திகதி ஒரு பல் மருத்துவருடன் தனிப்பட்ட ஆலோசனையை மேற்கொண்டார். ஆகஸ்ட் மாதம் அவருக்கு நான்கு பற்கள் எடுக்கப்பட வேண்டும், மற்ற நான்கு பற்கள், செயற்கை பற்கள் பொருத்தப்படுவதற்கான தயாரிப்பில் ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு பிரித்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.