புதைக்கும்போது கேட்ட குரல்! பிரித்தானியாவில் தனது இறுதிச்சடங்கின் போது பேசிய பெண்
உயிரிழந்த பின்னர் இறுதிச்சடங்கின் போது பேசிய பெண்.
artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியமான நம்பமுடியாத விடயம்.
பிரித்தானியாவில் உயிரிழந்த பெண் தனது இறுதிச்சடங்கில் பேசிய சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக இது சாத்தியமாகியுள்ளது. உயிரிழந்த நபர் மீண்டும் வர மாட்டார் என்பதை நாம் அறிவோம்! ஆனால் சொர்க்கத்தில் இருந்து பேசுவது போல நம் கேள்விகளுக்கு பதில் சொன்னால் எப்படி இருக்கும்? நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது அல்லவா?
Holocaust பிரச்சாரகரான மரினா ஸ்மித் (87) என்ற பெண் கடந்த 1934ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தார். பின்னர் பிரித்தானியாவில் குடியேறிய நிலையில் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்துள்ளார்.
அவர் மகன் ஸ்டீபன் ஸ்மித் உருவாக்கிய தொழில்நுட்பத்தால் மரினா தனது இறுதிச்சடங்கின் போது தனது வாழ்க்கையை பற்றிய கேள்விகளுக்கு தானே விடையளித்தார்.
MARINA H. SMITH FOUNDATION
ஸ்டோரி பயல்ஸ் நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஸ்டீபன், ஒரு நபர் இறந்தவுடனும் அவருடன் உரையாடுவது சாத்தியம் எனவும், உயிருடன் இருக்கும் போது நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவது போலவே இறந்த பின்னரும் பதிலளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சரி, இது எப்படி சாத்தியம்?
அதாவது, ஒரு நபர் உயிருடன் இருக்கும் போதே அவர் வாழ்க்கையை பற்றிய பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த நபரின் மறைவிற்கு பிறகு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நினைவூட்டல் வீடியோவை பார்க்கும் நபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்து ஒளிபரப்பும்.
இதை பார்ப்பதற்கு இறந்த நபர் நம்முடன் உரையாடுவது போன்ற அனுபவத்தை தரும்.
kimdeyir