இலங்கையில் கால்களை இழந்த பிரித்தானிய பெண்: முன்னாள் வழக்கறிஞர்கள் மீது வழக்கு
Uk woman sues former lawyers after lost legs: பிரித்தானியப் பெண் சுற்றுலாப் பயணி தனது முன்னாள் வழக்கறிஞர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
இலங்கையில் விடுமுறையின்போது கால்களை இழந்ததால், இழப்பீடு பெறும் வாய்ப்பை கெடுத்ததாக, தனது முன்னாள் வழக்கறிஞர்கள் மீது பிரித்தானிய பெண் வழக்குத் தொடுத்துள்ளார்.
பிரித்தானியா சுற்றுலாப் பயணி
பிரித்தானியாவைச் சேர்ந்த கிளேர் சேவெல் என்ற பெண், தனது கணவர் டேவிட் உடன் இலங்கைக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்.
அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹொட்டல் ரிசார்ட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, 100 அடி உயர மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதில் அவரது கால்கள் நொறுங்கியது.
4.5 மில்லியன்
2017ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ, கிளேர் தனது கால்களில் பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டார். அதே சமயம் அவர் தனது வேலையை விட்டுவிட நேர்ந்தது.
பின்னர் அவர் பயண முகவரான Tui-க்கு எதிராக தனிநபர் காயத்திற்கான இழப்பீடு 4.5 மில்லியன் பவுண்ட்களை கோருவதற்காக ஸ்லேட்டர் அண்ட் கார்டன் யுகே நிறுவனத்தை நாடினார்.
ஆனால் அவர் தற்போது, சட்ட ஆவணங்கள் தவறான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டதால், Tui நிறுவனத்திற்கு அவற்றை வழங்குவதற்கான காலக்கெடுவை அவர்கள் தவறவிட்டதாக குற்றம்சாட்டி, ஸ்லேட்டர் அண்ட் கார்டன் யுகே மீதே வழக்குத் தொடுத்துள்ளார்.
