குப்பையில் வீசப்பட்ட ரூ.5900 கோடி சொத்து - இன்று வீடு வீடாக தேடி அலையும் நபர்!
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 569 மில்லியன் பவுண்டுகள் தோராயமாக ரூ. 5,900 கோடி மதிப்புள்ள பிட்காயின் அடங்கிய தனது முன்னாள் கணவரின் ஹார்ட் டிரைவைத் தவறுதலாக தூக்கி எறிந்துள்ளார்.
குப்பையில் வீசப்பட்ட ரூ.5900 கோடி சொத்து
ஒரு நபரின் முன்னாள் காதலி செய்த தவறு அவரை வாழ்நாள் முழுவதும் வருந்த வைத்துள்ளது.
இங்கிலாந்தின் வேல்ஸில் ஜேம்ஸ் ஹோவெல்ஸின் ஹார்ட் டிரைவில் அதிக அளவு பிட்காயின் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளது. அதை தற்செயலாக அவரது முன்னாள் காதலி தூக்கி எறிந்துள்ளார்.
அதில் சுமார் 8000 பிட்காயின்கள் இருந்தன. அதன் மதிப்பு இன்று கோடிகளில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ் இந்த டிரைவை பழைய மடிக்கணினியில் வைத்திருந்ததாகவும், மேலும் அவர் தனது முன்னாள் காதலியுடன் பிரிந்தபோது, டிரைவ் தவறுதலாக குப்பையில் வீசப்பட்டதாகவும் கூறுகிறார்.
குறித்த சம்பவமானது வீட்டை சுத்தம் செய்யும் போது நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வீடு வீடாக தேடி அலையும் ஜேம்ஸ்
இங்கிலாந்தின் வேல்ஸில் வசிக்கும் ஜேம்ஸ் ஹோவெல்ஸின் முன்னாள் காதலி ஹல்ஃபினா எடி-எவன்ஸ், தவறுதலாக 8,000 பிட்காயின்கள் இருந்த ஹார்ட் டிரைவை குப்பையில் வீசியதால், அதை தேடும் முயற்சியில் ஜேம்ஸ் இருந்து வருகிறார்.
இந்தப் பொக்கிஷத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் ஜேம்ஸ் கூறுகிறார்.
தனது ஹார்ட் டிரைவை திரும்ப பெற்றால், 10 சதவீத பிட்காயின்களை பயன்படுத்தி நியூபோர்ட்டை உலகின் சிறந்த நகரமாக மாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.
மேலும் இவர் குப்பையில் அதை தேடுவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், அவ்வாறு செய்வதனால் அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் சட்ட விசாரணை டிசம்பரில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |