பிரித்தானிய பெண்ணுக்கு பாஸ்போர்ட் மறுப்பு: பெயரை மாற்றியதால் வந்த வினை
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பெயரை மாற்றிக்கொண்டதால் பாஸ்போர்ட் பெற முடியாமல் தவிக்கிறார்.
பாஸ்போர்ட் மறுப்பு
Eileen De Bont என்ற 53 வயது பெண், கடந்த 2009ஆம் ஆண்டு தேசிய தொண்டு நிறுவனத்திற்காக பணம் திரட்டினார்.
அதற்காக தனது பெயரை "Pudsey Bear" என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். ஆனால், அந்த பெயர்தான் தற்போது அவருக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
2009ஆம் ஆண்டில் பாஸ்போர்ட்டிற்கு Eileen De Bont விண்ணப்பித்தபோது, உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
புலம்பும் பெண்
அதனைத் தொடர்ந்து, பதிப்புரிமை சட்டங்களை மீறியதாக மீண்டும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு, பதிப்புரிமை உரிமையாளரிடம் அனுமதி பெறுமாறும் உள்துறை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து Pudsey Bear கூறுகையில், "நான் இருப்பதுபோல் இருக்க அவர்கள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். எனது அனைத்து பில்கள், எனது வங்கி விவரங்கள், எனது உள்ளூர் சுகாதார அறக்கட்டளை எல்லாவற்றிலும் எனது புதிய பெயர் ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் பாஸ்போர்ட் அலுவலகம் மட்டுமே ஏற்கவில்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |