40 நிமிடங்கள் நின்று போன இதயத் துடிப்பு: மீண்டும் உயிர் பிழைத்த பிரித்தானிய பெண்: நடந்தது என்ன?
பிரித்தானியாவில் 40 நிமிடங்கள் இதய துடிப்பு நின்ற பெண் ஒருவர் மீண்டும் உயிர்த்தெழுந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நின்றது இதய துடிப்பு
பிரித்தானியாவில் ஸ்டூ-கிர்ஸ்டி போர்டோஃப்ட் என்ற தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தையுடன் இரவு பார்ட்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பார்ட்டிக்கு செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்த போது மனைவி கிறிஸ்டி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து பதறிப்போன கணவர் ஸ்டூ, மனைவியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பாழடைந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: பெங்களூருவில் பயங்கரம்
கிறிஸ்டியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கிறிஸ்டியின் இதயத்துடிப்பு முற்றிலுமாக நின்று விட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் உயிர் பெற்ற கிறிஸ்டி
இந்நிலையில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு பிறகு யாரும் எதிர்பாராத வகையில் கிறிஸ்டி மீண்டும் இதயத் துடிப்பை பெற்றுள்ளார்.
இதனை கண்ட மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர், இதற்கிடையில் தனக்கு என்ன நடந்து என்று தெரியவில்லை மயக்கம் ஏற்படுவதைப் போன்ற உணர்வு உண்டானது வரை தான் எனக்கு நினைவிருக்கிறது. என்று கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.
முதலில், எனக்கு வலி இல்லை ஆனால் என்னுடைய உடம்பு நொறுங்குவது போன்று இருந்தது, பின் விவரிக்க முடியாத உருவம் ஒன்று எனக்கு முன்னால் தோன்றியது. அது என்னுடைய ஆத்மா என்றே கருதுகிறேன் என கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.
அந்த உருவத்திடம் என் மகன்களுக்கும், அப்பாவுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயத்தை எழுத சொன்னேன், பிறகு எனது தோழியிடம் என் உடல் முழுவதும் நொறுங்கி விட்டது என கூறினேன்.
மீண்டும் என்னுடைய உடலுக்குள் என்னால் செல்ல முடியுமா என்று தெரியவில்லை என கூறினேன், அதற்கு இன்னும் உன்னுடைய காலம் முடியவில்லை, நீ உன் உடலுக்குள் போ என அதட்டி கூறினாள்.
நான் கண்விழித்து விட்டேன், அப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன், என்னை மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்" என கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |