லொட்டரியில் 1700 Pounds பரிசு? பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்
பிரித்தானிய பெண் ஒருவருக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது.
அனைவரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறோம், ஆனால் மிகச் சிலரே இதை அடைய முடியும். சில சமயங்களில் அந்த மைல்கல்லை அடைய மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், சிலர் லொட்டரியில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து தங்கள் கனவுகளை அடைகிறார்கள்.
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆரம்பத்தில், இதெல்லாம் ஒரு அதிர்ஷட பரிசா என தவறுதலாக புரிந்துகொண்டார்.
ஆனால், அவர் வென்ற தொகை மிகப்பாரியது மற்றும் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் என்பதை உணர்ந்தார்.
DailyStar-ல் வெளியான அறிக்கையின்படி, அந்த பெண் முதலில் லொட்டரியில் சிறிய தொகையை வென்றதாக நினைத்தார், ஆனால் உண்மையான தொகையைப் பார்த்தபோது அவள் வாயடைத்துப்போனார்.
பிரித்தானியாவின் Durham நகரில் வசிக்கும் டோனி ஹென்டர்சன் (Toni Henderson), சமீபத்தில் லொட்டரி சீட்டை அதிகம் எதிர்பார்க்காமல் வாங்கினார். அவர் லொட்டரி முடிவுகளைச் சரிபார்த்தபோது, அவர் 1700 பவுண்டுகள் வென்றதாக முதலில் நினைத்தார். அதற்காக அவர் மகிழ்ச்சியடைந்தார்.
ஆனால், ஓன்லைனிஸ் தனது கணக்கைத் திறந்து எண்களை சரிபார்த்தபோது முடிவுகளைக் கண்டு வியந்தார். 32 வயதான அந்த பெண் தனக்கு 1 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.38.5 கோடி) லொட்டரி அடித்ததை பார்த்தார்.
டோனி ஹென்டர்சன் தனது மகனுடன் தங்கி டர்ஹாம் கவுண்டி அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிகிறார்.
இத்தனைப் பாரிய தொகையை வென்ற பிறகு உற்சாகமடைந்த அவர், ஆச்சரியமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள தனது தாயைத் தொடர்பு கொண்டார். நள்ளிரவு நேரமாகிவிட்டதால் அவள் அழைப்புக்கு அம்மா பதிலளிக்கவில்லை.
எனவே, பரபரப்பான இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ள அவர் தனது தாய் வீட்டிற்கு காரில் சென்று கூறியுள்ளார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும், இந்த பணம் தனது மகனின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |