பிரித்தானிய தாயும் இரண்டு பிள்ளைகளும் சுட்டுக்கொலை: பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்
பிரித்தானியாவின் வட அயர்லாந்தில், ஒரு தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட தாயும் பிள்ளைகளும்
வட அயர்லாந்திலுள்ள Maguiresbridge என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று காலை 8.21 மணிக்கு பொலிசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
உடனடியாக அவர்கள் அங்கு விரைந்த நிலையில், அங்கு தனது 40 வயதுகளிலிருக்கும் வானஸா ஒயிட் (Vanessa Whyte) என்னும் பெண்ணும் அவரது மகளான சாரா மற்றும் மகன் ஜேம்ஸும், மற்றொரு ஆணும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்கள்.
உடனடியாக அவசர உதவிக்குழுவினர் சிகிச்சையளித்தும் அவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, மூன்றாவது நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
அந்த ஆண் மட்டும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
We are working with the GAA at county, provincial and national level, to implement the Association’s critical incident protocols. We will also work closely with all appropriate services to ensure that those who require support at this difficult time can access it. 2/3
— Lisbellaw St. Patrick’s HC (@Lisbellaw_HC) July 23, 2025
முக்கிய விடயம் என்னவென்றால், அவர்கள் நான்கு பேருமே துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தார்கள். ஆக, அவர்களில் ஒருவர் மற்றவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தான் சுட்டுக்கொண்டிருக்கலாம் என்னும் ரீதியிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
St Patrick’s Hurling Club Lisbellaw offer our heartfelt condolences to the family and friends of all those impacted by the tragic incident this morning in Maguiresbridge. 1/3
— Lisbellaw St. Patrick’s HC (@Lisbellaw_HC) July 23, 2025
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த விடயம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |