தந்தை வயது கோடீஸ்வரை மணக்கும் 23 வயது பிரித்தானிய பெண்! அசரடிக்கும் காரணம்
பிரித்தானியாவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் 56 வயதான கோடீஸ்வரரை காதலிக்கும் நிலையில் அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Allana Luke (23) என்ற இளம்பெண் Jeff Winn (56) என்ற நபருடன் முதன் முதலில் டிண்டர் செயலி மூலம் கடந்த 2020ல் அறிமுகமானார். பின்னர் ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ளது, Jeff Winn பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவரை Allana காதலிக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பினர். Allanaவுக்கு விலையுயர்ந்த கார், வைர நகைகள், ரோலக்ஸ் கடிகாரம் போன்ற பரிசுகளை Jeff கொடுத்துள்ளார்.
lifeatthecastle / MERCURY PRESS
இதோடு ஸ்பெயின், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் இருவரும் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.
Allana கூறுகையில், நான் பணத்திற்காக Jeff உடன் இருக்கவில்லை. எங்கள் வயது வித்தியாசத்தை பார்க்கும் பலரும் நான் பணத்திற்காக அவருடன் இருப்பதாக நினைக்கின்றனர்.
Jeff தனது வீட்டை இழந்து, பணத்தையெல்லாம் இழந்து திவாலானாலும் கூட நான் அவருடன் தான் இருப்பேன். எங்கள் திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என கூறியுள்ளார்.