இளவரசி டயானாவுடன் பழக்கம்! 50 வயதில் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண் சொன்ன ஆச்சரிய தகவல்கள்
வாழ்க்கை துணையில்லாமல் 50 வயதில் குழந்தை பெற்ற பெண்.
விமான பணிபெண்ணாக பணிபுரிந்த போது டயானாவுடன் கூட பழக்கம் என தகவல்.
பிரித்தானியாவை சேர்ந்த வாழ்க்கை துணையில்லாத பெண் 50 வயது குழந்தை பெற்று அதை நல்லபடியாக வளர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருர பெண் சிங்கிள் பேரென்டாக இருப்பது அவருக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்த கூடும். ஆனால் பிரித்தானியவை சேர்ந்த ஒரு பெண் தானாக விருப்பபட்டு சிங்கிள் பேரன்ட் ஆகி இருக்கிறார்.
அதுவும் 50 வயதில் என்றால் நம்ப முடிகிறதா? கெல்லி கிளார்க் என்பவருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இவருக்கான சரியான மற்றும் சிறந்த வாழ்க்கை துணை கடைசி வரை அமையவில்லை.
எனவே தனது 50-ஆவது பிறந்த நாளில் தனது குழந்தை ஆசையை நிறைவேற்றி கொள்ள ஒரு மிக பெரிய முடிவை எடுத்தார். அது தான் IVF முறையை பயன்படுத்தி ஒரு குழந்தையை பெற்றெடுப்பது.
SWNS/pinterest
ஆனால் அவரின் முடிவுக்கு குடும்பத்தார், நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனது ஆசையை நிறைவேற்றி கொள்ள கிரீஸ் நாட்டிற்கு பறந்து சென்றார், இறுதியாக தாயாக வேண்டும் என்ற தனது நீண்ட கால ஆசையை மார்ச் 2021-ல் தனது மகள் Lyla Rae-ஐ இந்த பூமிக்கு வரவேற்றதன் மூலம் நிறைவேற்றி கொண்டார்.
தற்போது எனது மகள் Lyla Rae வளரும் ஒவ்வொரு தருணத்தையும் தவறவிடாமல் பார்த்து மகிழ்கிறேன். தவிர என்னுடைய வாழ்க்கை அனுபவத்தின் இவளை எனது இளமைப் பருவத்தில் இருந்ததை விட இப்போது சிறப்பாக வழிநடத்த முடியும் என்பதை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
கெல்லி 20 ஆண்டுகளுக்கும் மேலாக விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்துள்ளார். மறைந்த இளவரசி டயானாவுடன் கூட அவருக்கு பழக்கம் இருந்திருக்கிறது. ஆம்! டயானா, கேட் மோஸ் மற்றும் டாம் ஜோன்ஸ் உள்ளிட்ட பல VVIP-க்களுக்கு விமானத்தில் பணிப்பெண்ணாக பணி செய்துள்ளார்.
Kelly Clarke/SWNS