பாரம்பரிய முறையில் இந்திய இளைஞரை திருமணம் செய்த அழகிய பிரித்தானிய பெண்! சுவாரசிய பின்னணி
பிரித்தானியாவை சேர்ந்த இளம்பெண் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு பணி விடயமாக வந்த நிலையில் தற்போது இந்தியாவின் மருமகளாக மாறியிருக்கிறார்.
Rhiannon Harries என்ற பிரித்தானிய பெண் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் அடங்கிய தெற்காசியாவிற்கான பிரதி வர்த்தக ஆணையாளர் ஆவார். இவர் இந்தியாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வரும் போது தனது வருங்கால கணவர் ஒரு இந்தியராக இருப்பார் என நினைத்திருக்க மாட்டார்.
ஆம்! Rhiannonவுக்கும் இந்தியரான Himanshu Pandey என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்படி, இந்திய வட மாவட்டத்தில் பிரபலமாக இருக்கும் பாரம்பரிய உடையான சிவப்பு lehenga உடையை திருமண உடையாக Rhiannon அணிந்தபடி Himanshu-வை மணந்து கொண்டார்.
When I arrived in #India nearly 4 years ago, I had many hopes & dreams for my time here. But never did I imagine I would be meeting & marrying the love of my life. ❤️ I found such happiness in #IncredibleIndia & so glad it will always be a home. ?? #shaadi #livingbridge #pariwar pic.twitter.com/mfECCj3rWi
— Rhiannon Harries (@RhiannonUKGov) February 18, 2022
Himanshu Pandey திரைப்பட துறையில் இருக்கிறார். திருமண புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட Rhiannon-வின் பதிவில், ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவுக்கு வந்தபோது, எனக்கு பல நம்பிக்கைகளும் கனவுகளும் இருந்தன.
ஆனால் நான் என் காதலனை இங்கு சந்தித்து திருமணம் செய்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. #IncredibleIndia இல் நான் அத்தகைய மகிழ்ச்சியைக் கண்டேன் என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு 33000க்கும் அதிகமான லைக்குகள் கிடைத்து வைரலாகியுள்ளது. இதையடுத்து பலரும் Rhiannon - Himanshu தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Himanshu @godrockfilms & I are overwhelmed by the beautiful messages of congratulations on our #shaadi from across #India & beyond. Thank you for making me feel even more welcome in #IncredibleIndia - definitely feeling the love! ??????? pic.twitter.com/j4DIliQLOs
— Rhiannon Harries (@RhiannonUKGov) February 20, 2022