பிரித்தானியாவில் வறட்சி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முக்கிய பகுதி
பிரித்தானியாவில் போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தினால் அதிகாரப்பூர்வ வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி பகுதியாக அறிவிப்பு
பிரித்தானியாவில் வசந்த மற்றும் கோடை காலத்தில் ஏற்பட்ட குறைவான மழைப்பொழிவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றால் யார்க்ஷயர் பகுதியில் அதிகாரப்பூர்வ வறட்சி பகுதியாக சுற்றுச்சூழல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலையுதிர் காலத்தில் இருந்த லேசான மழை பொழிவு ஆறுதல் அளித்தாலும் யார்க்ஷயர் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் நதிகளில் நீர் அளவானது மிகக் குறைவானதாக உள்ளது.

நீண்ட காலமாக நிலவி வந்த வறண்ட வானிலை தற்போது வறட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம் மத்திய, தெற்கு மற்றும் இங்கிலாந்துடன் சேர்த்து யார்க்ஷயர் பகுதியும் வறட்சி ஏற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வட கிழக்கு மற்றும் வட மேற்கு பகுதிகள் தொடர்ந்து நீண்ட கால வறண்ட வானிலை எச்சரிக்கையின் கீழ் தொடர்ந்து வருகிறது.
யார்க்ஷயர் வரலாற்றில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டம் 5வது மிக மோசமான வறண்ட காலக்கட்டமாக பதிவு செய்யப்பட்டிருப்பது சுற்றுச்சூழல் தரவுகளின் படி தெரியவந்துள்ளது.