பிரித்தானியாவில் கொடூரமாக மகள் கொலை! உடந்தை நபர் விடுவிப்பால் தந்தை ஆதங்கம்..பிரதமருக்கு கடிதம்
பிரித்தானியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக, குறித்த பெண்ணின் தந்தை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுட்டுக்கொலை
அழகுக்கலை நிபுணரான Elle Edwards (26) என்ற பெண், கடந்த 2022ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் Connor Chapman (24) என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த Thomas Warning (21) என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் Thomas Warning முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான செய்தியை, கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை Tim Edwards பெற்றார். அதில் 'சிறை மக்களுடனான குறிப்பிடத்தக்க சிக்கல்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
தண்டனையை கேலி செய்கிறது
இதனால் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். Tim Edwards நேர்காணலில் கூறுகையில்,
"இது தண்டனையை கேலி செய்கிறது. கடிதம் கிடைத்ததும் எனக்கு அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருந்தது. எந்தத் தடையும் இல்லை; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள் என்றால், அது குற்றவாளியாக இருப்பதற்கான வெகுமதியாகத் தெரிகிறது. வெளிப்படையாக அவர் ஒரு கொடூரமான குற்றத்திற்கு உதவியுள்ளார். இது நாங்கள் செய்ய முயற்சிக்கும் அனைத்திற்கும் எதிரானது. அதனால் மிகவும் ஏமாற்றமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும் Thomas Warning விடுவிக்கப்பட்டது தொடர்பாக பிரதமருக்கு Edwards கடிதம் எழுதியுள்ளார்.