விடுமுறைக்கு சென்ற 25 வயது பிரித்தானியர்: தீவு நாட்டில் நேர்ந்த துயரம்
Uk youth dies in malta fell down balcony: மால்டாவில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
விடுமுறையை கழிக்க மால்டாவிற்கு சென்ற பிரித்தானிய இளைஞர், ஹொட்டல் அறையின் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
விடுமுறையைக் கழிக்க
பிரித்தானியாவைச் சேர்ந்த 25 வயது மென்பொருள் பொறியாளர் கீரன் ஹியூஸ். இவர் விடுமுறையைக் கழிக்க தீவு நாடான மால்டாவிற்கு சென்றுள்ளார்.
ஹியூஸ் தனது நண்பர்களுடன் ஹொட்டலில் தங்கியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஹியூஸ், செயின்ட் ஜூலியன்ஸ் பகுதியில் உள்ள Cavalieri Art Hotel-க்கு திரும்பியுள்ளார்.
அடுத்த 48 நிமிடங்களில் ஹியூஸ் தனது அறையின் பால்கனியில் இருந்து விழுந்துள்ளார்.
தவறி விழும் காட்சிகள்
இதில் பலத்த காயமடைந்ததில் அவர் உயிரிழந்தார். அவர் பால்கனியில் இருந்து தவறி விழும் காட்சிகள் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளன.
ஹியூஸின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் வடக்கு வேல்ஸின் கேர்னார்ஃபோனைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அவரது இறப்பிற்கான காரணம், கீழே விழுந்ததால் ஏற்பட்ட பலத்த காயங்களே என்று விசாரணை அதிகாரி எலிசபெத் டட்லி-ஜோன்ஸ் கண்டறிந்தார். இந்த மரணம் ஒரு விபத்து என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
