இங்கிலாந்தில் அதிசயம்: 90 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த உயிரினம்
இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஆப்பிரிக்க உயிரினமான Aardvark பிறந்துள்ளது.
Chester Zooல் கடந்த ஜனவரி 4ம் திகதி இந்த அரிய வகை உயிரினம் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு Dobby என பெயரிட்டுள்ளதாகவும், Dobby பெண் உயிரினம் எனவும் மிக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் மிருகக்காட்சி சாலையை சேர்ந்த ஊழியர் ஒருவர்.
இதுகுறித்து Dave White என்பவர் கூறுகையில், Dobby பிறந்தவுடன் சற்று பயந்த நிலையில் இருந்ததாலும், தாயின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் இரவு முழுவதும் ஊழியர்கள் மேற்பார்வையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இன்குபேட்டர் உதவியுடன் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை உணவளிக்கப்பட்டு, மறுநாள் காலை தாயிடம் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் மொத்தம் 68 உயிரினங்கள் மட்டுமே உள்ள நிலையில், காடுகளில் மனிதனின் ஆக்கிரமிப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக Aardvark உயிரினங்கள் அழிந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.