தித்திக்கும் சுவையில் செட்டிநாடு உக்கரை.., இலகுவாக செய்வது எப்படி?
வீட்டில் பண்டிகைகளில் வழக்கமாக செய்யும் இனிப்புகளுக்கு பதிலாக இந்த சுவையான உக்காரையை செய்து சாப்பிடுங்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் செட்டிநாடு உக்காரையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு- 1 கப்
- வெல்லம்- 4 கப்
- நெய்- தேவையான அளவு
- ரவை- 1 கப்
- ஏலக்காய் தூள்-1 ஸ்பூன்
- முந்திரி-15
செய்முறை
முதலில் குக்கரில் பாசி பருப்பை பொன்னிறமாக வறுத்து தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
வெல்லத்தை தண்ணீர் ஊற்றி நன்கு கரைந்து பாகு அளவிற்கு காய்ச்சவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி ரவை சேர்த்த பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து வேகவைத்த பாசிபருப்பை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனைத்தொடர்ந்து வெல்லப்பாகை இதில் வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த கிளறவேண்டும்.
இறுதியாக இதில் அரை கப் அளவு நெய், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான உக்காரை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |