மோசமான தாக்குதலுக்கு பிறகு..தலைநகர் மீது மீண்டும் பாய்ந்த ஏவுகணைகள்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
11 பேர் உயிரிழந்ததாக
இந்த ஆண்டு உக்ரைனின் தலைநகர் கீவ்வில் ரஷ்யா மிக மோசமான தாக்குதலை நடத்தியது.
இதனையடுத்து சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஏவுகணைகள், ட்ரோன் விமானங்களைக் கொண்டு ரஷ்யா தாக்கியுள்ளது.
இரவு முழுவதும் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ, நகரம் முழுவதும் 46 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க, தெற்கில் உள்ள கருங்கடல் துறைமுகமான ஒடெசாவும் தாக்குதலுக்கு உள்ளானது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
351 ட்ரோன் விமானங்கள்
இந்தத் தாக்குதலில் 68 ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
அதில் 23 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 6 சூப்பர் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் 351 ட்ரோன் விமானங்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 37 ஏவுகணைகளையும், 326 ட்ரோன் விமானங்களையும் விமானப்படைப் பிரிவுகள் சுட்டு வீழ்த்தின என்றும் விமானப்படைத் தரவுகள் காட்டியுள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |