புடினால் கடத்தப்பட்ட குழந்தைகள்... சுவிட்சர்லாந்தின் உதவியை நாடியுள்ள உக்ரைன்
புடின் உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க உக்ரைன் சுவிட்சர்லாந்தின் உதவியை நாடியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் உதவியை நாடியுள்ள உக்ரைன்
சுவிஸ் நாடாளுமன்ற தலைவரான Maja Riniker உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு சென்றுள்ள நிலையில், நேற்று அவர் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
அப்போது, சுவிட்சர்லாந்து தங்களுக்கு வழங்கி வரும் நிதி உதவிக்காக Rinikerக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ஜெலன்ஸ்கி.
அத்துடன், புடினால் கடத்தப்பட்ட உக்ரைன் குழந்தைகளை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து உதவும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார் ஜெலன்ஸ்கி.
இந்நிலையில், மனித உரிமைகள் அமைப்பான Amnesty International, 20,000 உக்ரைன் குழந்தைகள் ரஷ்யாவால் கடத்தப்பட்ட விடயம், அந்தக் குழந்தைகளின் பெயர் உட்பட உக்ரைன் அதிகாரிகளுக்குத் தெரியும் என்று கூறியுள்ளது.
அத்துடன், அவர்கள் இதுவரை உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை என்றும், கடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையோ மேலும் அதிகம் என்றும் கூறியுள்ளது அந்த அமைப்பு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |