16 முறை நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட உக்ரைன் இளம்பெண்: ரஷ்யர்களின் அராஜகம்
மரியூபோலிலிருந்து தப்பி வெளியேறும்போது 16 சோதனைச்சாவடிகளில் ரஷ்யப் படையினரால் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார் ஒரு ஒரு இளம்பெண்.
எப்போது வன்கொடுமைக்காளாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் நடுநடுங்கிப்போயிருந்த Alina Beskrovna என்ற அந்த இளம்பெண், தான் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
மரியூபோலிலுள்ள உருக்காலைக்குள் பதுங்கியிருந்த ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களில் Alinaவும் ஒருவர்.
அந்த உருக்காலைக்குள் இருப்பதை வெளியே இருப்பதைவிட பாதுகாப்பானதாக உணர்ந்தாலும், உக்ரைனை விட்டு வெளியேறிய சிலர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைக்கவே, தானும் தன் தாயும் மரியூபோலிலிருந்து வெளியேறுவது என முடிவு செய்துள்ளார் Alina.
ஆனால், உக்ரைன் எல்லையைக் கடப்பதற்குள் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள், Alinaவும் அவருடன் பயணித்தவர்களும்.
ஆம், 16 சோதனைச்சாவடிகளை அவர்கள் கடந்து வரவேண்டியிருந்த நிலையில், அந்த 16 சோதனைச்சாவடிகளிலும் Alina முதலான பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை செய்தார்களாம் ரஷ்யப் படையினர்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் கடந்துவந்தது ரஷ்யப் படையினரை மட்டுமல்ல, கொடூரமான செசன்யர்களையும். இந்த செசன்யர்கள் போரிடும்போது பெண்களை சீரழிப்பவர்கள் என்பதை உலகமே அறியும் என்பதால் பயந்து நடுங்கிக்கொண்டு, ஆனால், பயத்தை வெளிக்காட்டாமல், போலியான புன்னகையுடன் அவர்களை எதிர்கொண்டார்களாம் இந்த உக்ரைன் பெண்கள்.
இவ்வளவு பயங்கர அனுபவத்திற்குப் பிறகும், தாங்கள் எளிதாக உக்ரைனிலிருந்து வெளியேறியதாகவே தான் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Alina.
காரணம், எப்போது வேண்டுமானாலும் தங்களை சோதனையிடும் அந்த ரஷ்யப் படையினரும் செசன்யர்களும் தங்களை ஓரமாக தள்ளிக்கொண்டுபோய் வன்புணர்ந்துவிடும் அபாயம் இருந்தாலும், அன்று அவர்கள் பெண்களை கண்டுகொள்ளவில்லை என்றும், தங்களுடன் பயணிப்பவர்கள் உக்ரைன் இராணுவ வீரர்களா என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.
மற்றொரு அபாயம் என்னவென்றால், தங்கள் மீது ரஷ்யா ஏவுகணை வீசியது என்பதற்கு ஆதாரமாக ரஷ்ய ஏவுகணைகளின் சில துண்டுகளை தனது பையில் வைத்திருந்திருக்கிறார் Alina. அதை அவர்கள் கண்டுபிடித்திருந்தால் நிலைமை எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்கு மோசமாகியிருந்திருக்கும்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது பையை யாரும் சோதனையிடவில்லையாம்.
இப்போது Copenhagenஇல் தற்காலிகமாக தங்கியிருக்கும் Alina, தானும் தன் தாயும் கனடாவுக்கு வரும் ஆசையில் இருப்பதாக தெரிவிக்கிறார். (அவரது தந்தையோ இன்னமும் மரியூபோலில்தான் இருக்கிறார், ரஷ்யர்கள் மொபைல் டவர்களை அழித்துவிட்டபடியால், தாங்கள் மரியூபோலிலிருந்து வெளியேறும் விடயத்தை தந்தைக்குத் தெரிவிக்கமுடியவில்லை Alinaவால்...).
கனடாவில் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால், உக்ரைனியர்களில் பலர் ரொரன்றோவிற்குத்தான் சென்றிருக்கிறார்கள்.
ஆனால், எனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஒரே நபர் நான்தான் என்பதால், எனக்கு எங்கு வேலை கிடைக்குமோ அங்கு செல்ல விரும்புகிறேன் என்கிறார் Alina.