ஆளி விதைகளில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!
ஆளி விதைகள் என்றழைக்கப்படும் Flax Seeds-களில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக் கூடிய விதைகள், மிகவும் கடினமாகவும், மேற்பகுதி மொறுமொறுவெனவும் இருக்கும்.
பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, கனிமச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது.
நன்மைகள் நமது உடலில் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதுடன், உயர் ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்துகிறது.
பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை கரைக்கிறது.
பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை சீராக்குகிறது, தினமும் இதனை உட்கொண்டு வந்தால் முடி கொட்டுவது நிற்கும்.
ஆளி விதைகளில் நிறைந்துள்ள லிக்னன்கள், உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.