ரஷ்யாவுடனான போரை தவிர்க்க உக்ரைன் இதற்கு ஒப்புக்கொள்ளக்கூடும்! வெளிப்படையாக கூறிய பிரித்தானியாவுக்கான தூதர்
ரஷ்யாவுடனான போரை தவிர்க்க உக்ரைன் நேட்டோவில் சேராமல் இருப்பதற்கு ஒப்புக்கொள்ளக்கூடும் என பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் Vadym Prystaiko கூறியதாவது, நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான அதன் நோக்கத்தில் வளைந்து கொடுக்க உக்ரைன் தயாராக இருக்கிறது.
நாங்கள், குறிப்பாக அது போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம், அதனால் அச்சுறுத்தப்பட்டு, அத்தகைய முடிவெடுக்க தள்ளப்படலாம் என Prystaiko தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ உறுப்பினராக இல்லை, ஆனால் 2008 ஆம் ஆண்டிலிருந்து நேட்டோவில் இணைவதாக வாக்குறுதி அளித்து வருகிறது.
நேட்டோ கூட்டணியில் சேர உக்ரைனக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அதன் மூலம் நேட்டோ நாடுகள் அதன் படைகளை ரஷ்யா எல்லைக்கு அருகே இருக்கும் உக்ரைன் பகுதியல் நிலைநிறுத்த வழிவகுக்கும்.
ஆகவே, உக்ரைன் கூட்டணியில் இணைந்தால் ரஷ்யாவை குறிவைத்து நேட்டோ ஏவுகணைகளை ஏவுவதற்கான தளமாக அந்நாடு மாற்றக்கூடும் என்று புடின் கூறி இருக்கிறார்.
மேலும், இது போருக்கான தூண்டுதலாக அமையும் என புடின் எச்சரித்திருக்கிறார்.
இதை கருத்தில் கொண்டு உக்ரைன் நேட்டோவில் இணையும் எண்ணத்தை கைவிட வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.